சினிமா

பேட்ட படத்தின் முக்கிய காட்சிகளை வெட்டி தூக்கிய சென்சார் போர்டு!

Summary:

Six scenes fremoved from petta movie

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்டம் பேட்ட. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, சசி குமார் என தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரஜினியின் 2 . 0 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பேட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் படத்தின் இசை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தணிக்கைக்கு சென்ற இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் பேட்ட படத்திலிருந்து சென்சார் குழுவினர் 6 காட்சிகளை நீக்கியுள்ளனர்.  இதற்கிடையில், சென்சார் குழுவினரால் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வசனங்கள், மியூட் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்ட காட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


Advertisement