கடன் சிக்கலில் தவித்த நடிகர் சிவகார்த்திகேயன்! செம டீல் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்! என்னனு தெரியுமா??

ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் அவர் அயலான், டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மெகா பட்ஜெட் திரைப்படங்கள் சில வெற்றிகரமாக ஓடாத நிலையில், அதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட கடனை அவர் தனது கடனாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு பல கோடி கடன் உண்டாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இரு ஆண்டுகளில் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது கடன் பிரச்சினை தீரும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.