சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஓபனிங் சாங்; அடுத்த படத்தில் மாஸாக களமிறங்கும் வளரும் நாயகன்!!

Summary:

Siva opening song ar rahman

வளரும் நடிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். அதிலும் அவருடைய குரலில் ஓபனிங் சாங் என்றால் சொல்லவே தேவையில்லை, உற்சாகமாகி விடுவார்கள் நடிகர்கள். 

அப்படி ஒரு அதிர்ஷ்டம் தான் கிடைத்திருக்கிறது தமிழ் சினிமாவின் வளரும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு. 

‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு,  இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும்,  'இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் மற்றொரு படமும் நடித்து வருகிறார்.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை டி.இமான் மற்றும் அனிருத் இசையில் மட்டுமே நடித்து வந்த சிவகாாார்த்திகேயன் முதன்முறையாக ரஹ்மான் இசையில் நடிக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறப்போகும் ஓப்பனிங் பாடலுக்கான இசையை, சிவகார்த்திகேயனிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதைக்கேட்டு மெய்மறந்த சிவகார்த்திகேயன், ‘இந்தப் பாடலை நீங்களே பாடினால் நன்றாக இருக்குமே…’ என்று ரஹ்மானிடம் கூறியுள்ளார். அதை நிறைவேற்றி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.இதை தொடர்ந்து உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறினார்.


Advertisement