சினிமா

சிவகார்த்திகேயனின் புது படத்தின் பெயர் இதுவா? இருந்தா நல்லா இருக்கும்!

Summary:

Siva karthikeyan new movie name asault goes viral

விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பிரமாண்ட ஒப்பனிங் வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சீமராஜா. படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியது. நடிகர் சிவகார்த்திகேயனின் தோல்விப்படங்களில் சீமராஜாவும் ஓன்று.

சீமராஜா படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். SMS, பாஸ் என்கிற பாஸ்க்கரன், OK OK போன்ற வெற்றிப்படங்களை இயக்கிவர் இயக்குனர் ராஜேஷ். ஆனால் இவர் இயக்கிய சமீபத்திய படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின.

இந்நிலையில் ராஜேஷ் மற்றும் சிவா இருவரும் கூட்டணி சேர்ந்து புதுப்படத்தை எடுத்துவருகின்றனர். இந்த படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறியாது. மேலும் “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் ஒருபடத்தில் கம்மிட் ஆகியுள்ளார் சிவா.

இந்நிலையில் சிவா, ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு அசால்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Assault

ஆனால், அது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்று பின்னர் தான் தெரியவந்த்து. உண்மையில் அசால்ட் என்ற பெயரில் இயக்குனர் பூபதி ராஜா என்பவர் குறும்படம் ஒன்றை இயக்கி இருந்தார். தற்போது அதே பெயரில் திரைப்படத்தை எடுத்து வருகிறார். ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், சென்றாயன் ஆகியோர் நடடித்து வருகின்றனர்.


Advertisement