வெளியானது விஜய் சேதுபதியின் அட்டகாசமான "சிந்துபாத்" டீசர்! ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்து வரும் 'சிந்துபாத்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி - அருண்குமார் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் படம் சிந்துபாத். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் அஞ்சலியுடன் விஜய் சேதுபதி காதல் செய்வது போன்ற போஸ் இடம்பெற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிமிடத்தில் இருந்தே படத்தின் டீசருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அட்டகாசமான டீசர் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக உள்ளது.