வில்லியாக அவதாரமெடுக்கும் நடிகை சிம்ரன்! அதுவும் எந்த டாப் ஹீரோவுக்கு தெரியுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!

வில்லியாக அவதாரமெடுக்கும் நடிகை சிம்ரன்! அதுவும் எந்த டாப் ஹீரோவுக்கு தெரியுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!


simran-may-be-act-as-villi-ti-actor-karthi

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக, முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த நிலையில் அவர் இடையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல பிரபலங்களின் படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார்.

Karthi

இந்த நிலையில் நடிகை சிம்ரன் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகும்  சர்தார் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். சர்தார் படத்தில் நடிகை சிம்ரன் நடிகர் கார்த்திக்கு வில்லியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.