17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரபல நடிகை சிம்ரன்,  இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  தல அஜித்துடன் இவர் நடித்த வாலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

அதன் பின்னர் விஜய், விஜயகாந்த், பிரபுதேவா என தமிழ் சினிமாவின் பல்வேறு பிரபலங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை சிம்ரன்.  அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிசியாகிவிட்ட நடிகை சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமா ராஜா திரை படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன்.  மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை சிம்ரன், நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகிவரும் ராகெட்டரி என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாதவன், சிம்ரன் இருவரும் கடைசியாக 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.  அதன் பிறகு 17 வருடங்கள் கழித்து தற்போது ராகெட்டரி திரைப்படம் மூலம் சிம்ரனும், மாதவனும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo