"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
நடிகை த்ரிஷாவுடன் சிம்புவிற்கு திருமணமா? தீயாய் பரவிய தகவல்! பெற்றோர்கள் விடுத்த அதிரடி அறிவிப்பு!
நடிகை த்ரிஷாவுடன் சிம்புவிற்கு திருமணமா? தீயாய் பரவிய தகவல்! பெற்றோர்கள் விடுத்த அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக அலை என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்பு மற்றும் திரிஷா. அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் நடித்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விண்ணை தாண்டி வருவாயா 2 படமும் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா லாக்டவுனில் சிம்பு, திரிஷா இருவரும் இணைந்து கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்தனர். அது வெளியாகி சிறு சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சிம்பு மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இது குறித்து சிம்புவின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் குறித்து பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் தவறான செய்திகள் பரவி வருகிறது. கடந்த மாதம் கூட லண்டனில் உள்ள கோடீஸ்வர பெண்ணை சிம்பு திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மையில்லை. வதந்தி எனக் கூறியுள்ளனர்.