சினிமா

தந்தை டி.ராஜேந்தருக்கு உயர்சிகிச்சை! முன் கூட்டியே அமெரிக்கா பறந்தார் நடிகர் சிம்பு!!

Summary:

தந்தை டி. ராஜேந்தருக்கு உயர்சிகிச்சை! முன் கூட்டியே அமெரிக்கா பறந்தார் நடிகர் சிம்பு!!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் டி.ராஜேந்தர். இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு பரிசோதனையில் வயிற்றில் சிறு ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் அவரது உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுயநினைவுடன், நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து கூடிய விரைவில் உங்களை சந்திப்பார் என கூறியுள்ளார். இந்நிலையில், டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும், அவருக்கு முன்னதாகவே சிம்பு அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement