என்னோட இரத்தத்தில் அவங்கதான் இருக்காங்க.. எமோஷனலாக பேசிய நடிகர் சிம்பு!! அதிர்ந்துபோன அரங்கம்!!

என்னோட இரத்தத்தில் அவங்கதான் இருக்காங்க.. எமோஷனலாக பேசிய நடிகர் சிம்பு!! அதிர்ந்துபோன அரங்கம்!!


Simbu talk about fans in venthu thaninthafu kaadu audio launch

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இடையில் இவரது படங்கள் தோல்வியைத் தழுவி அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் கடின உழைப்பால் உடல் எடையை குறைத்து மாநாடு படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதில், 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் 3வது முறையாக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

simbu

 அப்பொழுது பேசிய சிம்பு தனது ரசிகர்கள் குறித்து மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, உடம்பில் எந்த பிரச்சினை வந்தாலும் முதலில் Blood Test தான் எடுப்பார்கள். ஆனால் இந்த உடம்பில் இந்த இரத்தத்தில் எனது ரசிகர்கள்தான் இருக்காங்க. அதனால் எனது ரத்தமும் உடம்பும் கெட்டுப்போக வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் வெறித்தனமாக ஆரவாரம் செய்துள்ளனர்.