அம்மாடியோவ். இம்புட்டா!! பிக்பாஸ் அல்டிமேட் தொகுத்து வழங்க வெறும் 5 நாளுக்கு சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு பார்த்தீங்களா!!

அம்மாடியோவ். இம்புட்டா!! பிக்பாஸ் அல்டிமேட் தொகுத்து வழங்க வெறும் 5 நாளுக்கு சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு பார்த்தீங்களா!!


simbu-salary-for-bigboss-ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி  நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது வாரத்தில் சுஜா வருணி மற்றும் மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் வெளியேறினர்.

பிக்பாஸ் 5 சீசன்களையும் உலக நாயகன் கமலே தொகுத்து வழங்கினார். அதனைப்போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கமல் கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த ப்ரமோவும் அண்மையில் வெளிவந்தது. 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஏற்கனவே 4 வாரங்கள் கடந்துவிட்டது. மேலும் இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ளது. அதிலும் சிம்பு வாரத்தில் ஒருநாள் மட்டுமே தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு ஒருநாளைக்கு ஒரு கோடி வீதம் 5 நாட்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.