சினிமா

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாதுனு ரெட் கார்ட் கொடுத்தது ஏன் தெரியுமா?? இதுதான் முக்கிய காரணம்!!

Summary:

நடிகர் சிம்புக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக

நடிகர் சிம்புக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர்களில் ஒருவர் சிம்பு. அவரை பற்றிய அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்க்கு தமிழக மக்கள் மத்தியில் சிம்பு பிரபலம். சமீபத்தி இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் "வெந்து தணிந்தது காடு" என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது என அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

நடிகர் சிம்பு நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு சொன்ன நேரத்தில் கலந்துகொண்டு படத்தில் நடிக்காத காரணத்தினால், தனக்கு இழப்பு ஏற்பட்டது எனக் கூறி அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் சிம்பு படங்களில் நடிக்க ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது நடிகர் சிம்புக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.


Advertisement