சிம்பு, நயன்தாரா திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டது...! இயக்குனர் பகீர் பேட்டி...!



simbu-nayanthara-marriage-secret-leaked-by-director

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் ஆனது உண்மை தான் என சிம்பு படத்தில் இயக்குனர்  நந்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவும், நடிகை நயந்தாராவும் காதலித்து வந்தது தமிழ் சினிமாவுக்கே தெரியும். ஆனால், அவர்கள் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் செய்துகொண்டதாக இயக்குநர் ஜி.டி. நந்து தற்போது அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவை வைத்து  கெட்டவன் படத்தை இயக்கியவர் இயக்குநர் ஜி.டி. நந்து. ஆனால், சில பல பிரச்சனைகளால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியில், நந்து பேட்டிக் கொடுத்தார். 

நயன்தாரா பற்றி பேசும் போது, நயனுக்கும் சிம்புவுக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. அது எனக்கு தெரியும் என்றும் மேலும், இருவரின் ஜாதகம் பொருத்தமாக இல்லை என்று பின்னர் தெரிய வரவே இருவரும் பிரிந்தனர் என புதிய முடிச்சை அவிழ்த்துள்ளார் நந்து.

நயன்தாரா, சிம்புவுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்ததும், அதுவும் கல்யாணம் வரை சென்று நின்றதும். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் குறிப்பிடத்தக்கது. இதற்கு சிம்பு மற்றும் நயன்தாரா தரப்பு விளக்கம் அளிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest tamil news