
Simbu meet bigboss sandy and dharshan
பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்த நிலையில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக நேரம் செலவிட்டு வருகின்றனர். மேலும் அனைவரும் சாண்டி வீட்டில் சாப்பிட்டு உற்சாகத்துடன் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் சிம்பு சாண்டியின் வீட்டிற்கு வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் சாண்டியை கட்டி அணைத்துமுத்தமிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Finally meeting my Thalaivar after Biggboss 😍😍😍😍♥️♥️♥️♥️ Forever love you thala 😍😘🥰 @iam_str ♥️♥️♥️ pic.twitter.com/MiIvp1LIh0
— SANDY (@iamSandy_Off) October 8, 2019
Advertisement
Advertisement