அதிரடி அறிவிப்பு! கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

அதிரடி அறிவிப்பு! கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!


simbu-may-host-bigboss-ultimate-show

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள் போட்டியாளர்களாக களமிறங்கினர் .இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது வாரத்தில் சுஜா வருணி மற்றும் மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் வெளியேறினர்.

இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என அனைவர் மத்தியிலும் பெரும் ஆவல் எழுந்தது.

இந்நிலையில் ஹாட்ஸ்டார் ட்விட்டர் பக்கத்தில் புதிய தொகுப்பாளர் குறித்த போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹீரோ ஒருவர் திரும்பி நின்ற கொண்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அவர் சிம்பு எனவும், அவர்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.