சினிமா

பால் பாக்கெட்ல வேண்டாம், அண்டாவுல ஊத்துங்க – சிம்பு அதிர்ச்சி வீடியோ!

Summary:

Simbu banner video goes viral

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகர் சிம்பு. எந்த படத்தில் நடித்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை, பீப் பாடல் என சிம்பு மீது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளது. தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரித்துவரும் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்ற நிலையில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிம்பு ஒரு விடீயோவை இணையத்தில் வெளியிட்டார். அதில், அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம், படம் வெளியாகும்போது பாலபிஷேகம், பேனர் போன்றவை வைக்கவேண்டாம். அதற்குப்பதில் உங்கள் பெற்றோர், உங்கள் உறவுகளுக்கு துணி வாங்கி கொடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டார்.

தற்போது அதே சிம்பு மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் முந்தைய வீடியோவில் கூறியது போல் செய்வயவேண்டாம் என்றும், பெரிய அளவில் கடவுட் வையுங்கள், பாக்கெட்டில் பாலபிஷேகம் செய்யாமல், அண்டா நிறைய பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் சிம்புவின் முந்தைய வீடீயோவை யாரோ கலைத்துள்ளார்கள் என்றும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு இவ்வாறு தனது ரசிகர்களை செய்ய சொல்லி கூறியிருப்பதாவும் பேசப்படுகிறது.


Advertisement