அஜித்தை தாக்கி பேசியுள்ளாரா சிம்பு? வைரலாகும் சிம்பு பேசிய வீடியோ!

அஜித்தை தாக்கி பேசியுள்ளாரா சிம்பு? வைரலாகும் சிம்பு பேசிய வீடியோ!


simbu-advice-to-his-fans

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகன் என்றால் அது நம்ம சிம்புதான். இவர்மீது எழாத சர்ச்சைகளே இல்லை. நயன்தாராவுடன் காதல் கிசு கிசு, ஹன்ஷிகாவுடன் காதல் முறிவு, பீப் பாடல், ஷூட்டிங் சரியாக போவதில்லை. இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் இவர் மீது எழுந்துள்ளது.

தற்போது லைக்கா தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் சிம்பு சரியான ஒத்துழைப்பு தராததால் இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

simbu

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் பொங்கலுக்கு வாழ்த்து கூறியதோடு, தனது ரசிகர்களுக்கு அறிவுறையும் கூறியுள்ளார் நடிகர் சிம்பு. அதில் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படம் ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும், படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் கூறினார்.

மேலும் புது படங்கள் வெளியாகும்போது படத்திற்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம் என்றும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினாலே சாதாரண விலையில் டிக்கெட் பெறமுடியும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் புது படங்கள் வெளியாகும்போது பாலபிஷேகம் செய்வது, கட்டவுட் வைப்பது இதுபோன்ற காரியங்களுக்கு பதில் உங்கள் அம்மாக்கு ஒரு புடவை, அல்லது உங்கள் தந்தைக்கு ஒரு சட்டை, அல்லது உங்கள் சகோதர சகோதரிகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுங்கள். வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்திற்கும் இதுபோன்று செய்யுங்கள் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

விஸ்வாசம் படம் வெளியான போது விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையைக்கு மகன் நெருப்பு வைத்தது, அஜித் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும்போது கட்டவுட் சரிந்து ஆறுபேறு காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.