அச்சோ.. என்ன இப்படி சொல்லிட்டாரே.! நடிகர் சித்தார்த்தின் அதிரடி முடிவால் செம ஷாக்கில் ரசிகர்கள்.!siddharth-talk-about-releaving-from-cinema

நடிகர் சித்தார்த் திடீரென சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து அவர் 180, உதயம் என்.எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது படங்களின் விளம்பரங்கள் மட்டுமின்றி சமூக அநீதிகளுக்கு எதிராகவும், அரசியல் சார்ந்த கருத்துக்களையும் வெளிப்படையாக வெளியிட்டு அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.  சித்தார்த் கைவசம் தற்போது இந்தியன் 2, மகா சமுத்திரம், சைத்தான் கே பச்சா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

siddharth

ஆனாலும் சில காலங்களாக வெளியாகும் இவரது படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சித்தார்த்,படங்களில் இனி நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தீயாக பரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.