சூப்பர்.. வேற லெவல்தான்! வாரிசு படத்தில் நடிகர் ஷாம் என்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா??

சூப்பர்.. வேற லெவல்தான்! வாரிசு படத்தில் நடிகர் ஷாம் என்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா??


Shyam role in vijay varisu movie

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

shyam

இந்த நிலையில் படப்பிடிப்புதளப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் லீக்காகி வருகிறது. இவ்வாறு அண்மையில் வெளிவந்த வீடியோவில், விஜய் மற்றும் ஷாம் ஆகியோர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் தொழிலாளர்கள் குழுவுடன் சண்டை போட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஷாம் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.