ஐராவில் லேடி சூப்பர்ஸ்டாருடன் தெறிக்கவிட்டுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்.! யார் தெரியுமா?

ஐராவில் லேடி சூப்பர்ஸ்டாருடன் தெறிக்கவிட்டுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்.! யார் தெரியுமா?


shwanth-act-with-nayanthara-in-airaa-movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மா  மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

nayanthara

 மேலும், இப்படத்தில் அவர்  பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், கலைப்புலி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் இவர்களுடன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தனது மழலையான பேச்சின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த மாஸ்டர் அஸ்வந்த் நடிக்கவுள்ளார். மேலும் அவர் படத்தில் பப்லூ என்ற கதாபாத்துரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

nayantharaஇந்நிலையில்  இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.