சினிமா

பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடனே, திருநங்கை நமீதாவை சந்தித்துள்ள முதல் போட்டியாளர்! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடனே, திருநங்கை நமீதாவை சந்தித்த முதல் போட்டியாளர்! வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இதில்  பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார்.  

அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஓரிரு நாட்களிலேயே வெளியேறினார். பின்னர் சமூக வலைதளங்களில் பிஸியான அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சுருதி மற்றும் நமிதா இருவரும் சந்தித்துள்ளனர். அதாவது அண்மையில் சுருதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்டத்தில் நமீதாவும் பங்கேற்று அவருக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் பகிர்ந்தநிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement