சினிமா

வேற லெவல் ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஸ்ருதியின் காதலர்!! அதை உலகநாயகன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தெ

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தென்னிந்திய சினிமாவிலேயே பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.  நடிப்பு, இசை, பாடல் என பயங்கர பிசியாக இருக்கும் இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருசில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக ஸ்ருதி டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்தநிலையில் அவர்தான் ஸ்ருதியின் புதிய காதலர் என பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் சாந்தனு ஹசாரிகா அண்மையில் சென்னை வந்து நடிகர் கமலை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவருக்கு பிரத்யேகமாக வரைந்த ஓவியம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நடிகர் கமல் நாங்க ரெடி ஆரம்பிக்கலாமா என கேட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement