சினிமா

என்னது..மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் அம்மனாக நடிக்கவிருந்தது இந்த இளம்நடிகையா! மிஸ் ஆகிருச்சே!!

Summary:

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதலில் அம்மன் வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே பாலாஜியும் அவரது நண்பர் சரவணனும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும் இப்படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் ஆர்.ஜே பாலாஜியும் இப்படத்தில் நடித்துள்ளார். அவர்களுடன்  இணைந்து இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார் என்றவுடன் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் படம் வெளியான பின்பு மாடர்ன் அம்மனாக அவர் பெரும் வரவேற்பை பெற்றார்.

இப்படத்தில் முதலில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்தான் நடிக்கவிருந்ததாகவும் ஆனால் இப்படத்தின் கதையை கேட்டவுடன் நடிகை நயன்தாரா நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதன்பின்னரே அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement