சினிமா

போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ரேயா! காரணம் என்ன தெரியுமா?

Summary:

Shriya

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில், ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கிய ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார். பின்னர் தற்பொழுது  விமல் நடிக்கும் சண்டைகாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பானது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரேயா திடீரென உயர்பாதுகாப்பு பகுதியில் அத்து மீறி நுழைந்துள்ளார். உடனே லண்டன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு படக்குழுவினர் அவரை காப்பாற்றியுள்ளனர். 


Advertisement