பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சென்னையில் புதிய தொழிலை தொடங்கிய நேர் கொண்ட பார்வை பட நடிகை! எங்கு, என்ன தொழில் தெரியுமா - வைரலாகும் புகைப்படம்.
தமிழில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர் கொண்ட பார்வை. இப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம் இவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை என்பதை தாண்டி தொழிலதிபராகவும் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சென்னை வேளச்சேரியில் ‛பெர்சி’ என்ற பெயரில் கபே ஒன்றை திறந்து உள்ளதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.