சினிமா

என்ன நடந்தது.? இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி வெளியேற்றம்..? அவருக்கு பதிலாக இந்த பிரபல நடிகை ஒப்பந்தம்.?

Summary:

Shivani quite irattai roja serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த இரட்டை ரோஜா தொடரின் நாயகி ஷிவானி நீக்கப்பட்டு அவருக்கு பதில் நடிகை ஷாந்தினி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் தொடர்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தபோது சக நடிகருடன் ஏற்பட்ட காதல் கிசுகிசுவை அடுத்து அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார் ஷிவானி.

இதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற தொடரில் தொடரின் நாயகி மற்றும் வில்லியாக இரட்டை வேடத்தில் நடித்துவந்தார் ஷிவானி. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளநிலையில் இரட்டை ரோஜா தொடரின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து சில தொடர்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரட்டை ரோஜா தொடரின் புது காட்சிகள் படமாக்க தயாராகிவரும்நிலையில் ஷிவானி அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக ஷிவானியின் சம்பளம் குறைக்கப்பட்டதாகவும், அதனால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் இனி நடிகை ஷாந்தினி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாந்தினி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபராகிவரும் தாழம்பூ தொடரில் நாயகியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement