சினிமா

மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு சென்ற ஷிவாங்கி! செம ஹேப்பியாக வெளியிட்ட வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமாக ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமாக ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவை அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டாகும். அவ்வாறு சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.

அதிலும் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீசனில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லட்சுமி, தீபா, மதுரை முத்து, தர்ஷா ஆகியோர் போட்டியாளர்களாவும், மணிமேகலை, ஷிவாங்கி, புகழ், பாலா, சரத், சக்தி, தங்கதுரை ஆகியோர் கோமாளிகளாகவும் செம ரகளை செய்து வந்தனர்,  இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி, பல படவாய்ப்புகளையும் பெற்றுள்ள ஷிவாங்கி மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு சென்று தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement