அட.. இவரையும் விட்டு வைக்கலயா! ரசிகர் கேட்ட கேள்வி! சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா!!

அட.. இவரையும் விட்டு வைக்கலயா! ரசிகர் கேட்ட கேள்வி! சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா!!



shivaki-answered-to-fan-about-valimai-update

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள தல அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வலிமை படத்திற்கான அப்டேட்டிற்காக தல ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படக்குழு துவங்கி இந்திய பிரதமர் வரை வலிமை அப்டேட் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கண்டு அதிருப்தியடைந்த நடிகர் அஜித், சிலரது செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், மேலும் அறிவித்தபடி படம் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள் எனவும் அறிக்கை வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித்  கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் வலிமை குறித்த அப்டேட் கேட்க, அவர் தனது பாணியில் சிரித்தவாறே எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க, ஒருவேளை எனக்கு தெரிந்தால் நான் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.