சினிமா

என்னை ஆபாச படத்தில் நடிக்க தூண்டியதே அவர் தான்.! எனது குருநாதரே அவர்தான்.! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை.!

Summary:

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். இந்த வழக்கில் பல்வேறு நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

திரைப்படங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகக் கூடிய வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அந்த ஆபாச வீடியோக்களை செல்போன்களில் வெளியிட்டு, பணம் சம்பாதிப்பதாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கூறுகையில், "நான் ஒரு கவர்ச்சி நடிகையாக மாறுவதற்கு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா தான் முதல் காரணம் என கூறியுள்ளார்.

என்னை தவறான வழிக்கு ராஜ்குந்த்ரா தான் கொண்டு சென்றார். நான் தவறான திசைக்கு செல்ல வழிகாட்டிய குருநாதர் அவர்தான். ஆபாசம், கவர்ச்சி, நிர்வாணம் போன்ற அனைத்துமே சாதாரணமான ஒரு காரியம்தான் என்று சொல்லி என்னை நம்ப வைத்தார். எல்லோரும் அவ்வாறு நடிக்கத்தான் செய்கிறார்கள். நானும் நடிக்க வேண்டும் என கூறி, ஆரம்பத்தில் கவர்ச்சி வீடியோக்களுடன் தொடங்கி இறுதியில் ஆபாச வீடியோக்கள் எடுத்தார். 

எனது மனைவிக்கு உங்களின் கவர்ச்சி வீடியோக்கள் அதிகம் பிடித்துள்ளது. அவர் உங்களை பாராட்டினார் என்றார். இதனை நம்பிய நான், பெரிய நடிகையான ஷில்பா ஷெட்டி பாராட்டியுள்ளார். அப்போது நாம் சரியான பாதையில் தான் செல்கின்றோம் என்று, நான் செய்த தவறு புரியாமல் அவரிடம் சிக்கிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement