சினிமா வீடியோ

10 கிலோ எடையை குறைத்து சிக்கென மாறிய ஷெரின்! எப்படி தெரியுமா? அவரே போட்டுடைத்த ரகசியம் இதோ. !

Summary:

Sherin tips to Loss weight

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் தமிழில் கதாநாயகியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சில காலங்களாக சினிமாவில் தலை காட்டாத ஷெரின் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மிகவும் குண்டாக வந்த ஷெரின் தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டார். மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து ஷெரின் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பலரும் அவரிடம் உடல் எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்களை கேட்டுள்ளனர். 

அதனை  தொடர்ந்து அவர் அதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எப்படி சாப்பிடுவது, என்னென்ன சாப்பிட வேண்டும், வீட்டு வேலை பார்க்க வேண்டும், நடனமாட வேண்டும் என பல ஐடியாக்களை கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement