அடேங்கப்பா! என்னவொரு ரொமான்ஸ்!! மீண்டும் பிக்பாஸ் ஜோடி செய்த காரியத்தை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!!



Sherin tharshan dance rehersal

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். 

 பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று இவர்தான்  பிக்பாஸ் பட்டத்தை தட்டிக் செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Bigg boss

தர்ஷன் மற்றொரு போட்டியாளரான ஷெரினுடன் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகி வந்தார். மேலும் இருவரும் காதலிப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஷெரின்  இறுதிக்கட்டம் வரை சென்று நான்காவது இடத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகியோர் விலகியே இருந்தனர். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும்படி ஒரு புகைப்படம் கூட பெறவில்லை.

இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக நடன பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தாஸ் மற்றும் சிலரின் ஒன்றாக ரசிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்ததுஇதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக டான்ஸ் பயிற்சி எடுத்து வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பிக்பாஸ்கொண்டாட்டத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.