அடேங்கப்பா.. அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய ஷாருக்கானின் செல்ல மகன்! என்னனு தெரியுமா? விளாசி வரும் நெட்டிசன்கள்!!

சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவிற்கு மூன்று நாள் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்லியா என்ற சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க பல முயற்சிகள் நடைப் பெற்ற நிலையில் விசாரணையில், ஆர்யன்கான் தானும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாருக்கான் எனது மகன் பிறந்த சில மாதங்களிலேயே கொடுத்த நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், எனது மகன் அவன் விருப்பத்திற்கு இருக்கலாம், புகைப்பிடிக்கலாம், போதை மருந்துகளை பயன்படுத்தலாம், பெண்கள் பின்னால் சுற்றி உல்லாசமாக இருக்கலாம். நான் செய்யாத அனைத்தையும் என் மகன் செய்ய வேண்டுமென கூறியிருந்தார். அந்த வீடியோவை தற்போது கண்ட நெட்டிசன்கள் உங்கள் மகனது நிலைமைக்கு நீங்கள் தான் காரணம். உங்களது கனவை நிறைவேற்றிவிட்டார் என விளாசி வருகின்றனர்.