சினிமா

வினய் படநடிகைக்கு கொரோனா உறுதி! அவர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Sharmila mandre affected by corono

தமிழில் வினய் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த மிரட்டல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷர்மிளா மந்த்ரே. மேலும் இவர் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா மந்த்ரே இவனுக்கு எங்கோ மச்சம் இருக்கு என்ற படத்தையும் தயாரித்துள்ளார். 

மேலும் அவர் தற்போது விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவாகும் சண்டக்காரி, மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள்தான் போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்தநிலையில் ஷர்மிளா மந்த்ரே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் மற்றும் எனது குடும்பத்தில் சிலருக்கு சோதனையில் பாசிட்டிவ் எனர்ஜி ரிசல்ட் வந்துள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகின்றனர். நானும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு  மருத்துவர் அறிவுரையின்படி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றேன் எனக் கூறியுள்ளார்.

 


Advertisement