சினிமா

இந்தியாவிற்குள் பரவிய கொரோனா வைரஸ்! சிரித்தபடி பிரபல நடிகை செய்த காரியம்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Summary:

sharmi post video about corono virus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் டெல்லி மற்றும் தென் மாநிலமான தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்திய மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர். 

        actress sharmiக்கான பட முடிவுகள்

இந்நிலையில் காதல் அழிவதில்லை காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சார்மி கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது குறித்து கிண்டலாக  வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் அவர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் டெல்லி மற்றும் தெலுங்கானாவிற்கு வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவரை மோசமாக திட்டி வருகின்றனர்.  அதனைத் தொடர்ந்து அவர் தனது  சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.


Advertisement