சினிமா

அடேங்கப்பா! தல அஜித்தின் மச்சினிச்சிக்குள் இவ்வளவு திறமையா? புகைப்படங்களை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள்!

Summary:

Shamili painting pictures viral

தமிழ் சினிமாவில் 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷாமிலி. இவர் தல அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினியின் தங்கை ஆவார்.

ஷாமிலி புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக துர்கா, சிவசங்கரி, தைப்பூசம், சின்ன கண்ணம்மா, சிவராத்திரி, தேவர் வீட்டு பொண்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீரசிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு,  மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஷாமிலி ஓவியம் வரையும் திறமை கொண்டவர். இவர் ஏராளமான அழகிய  ஓவியங்களை வரைந்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், அதனைக் கண்ட நெட்டிசன்கள் ஷாமிலிக்குள் இவ்வளவு திறமையா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 


Advertisement