அடேங்கப்பா.. சமந்தாவின் அந்த படத்திற்காக படக்குழு செய்த பிரம்மாண்ட காரியம்! அதுவும் எத்தனை கோடியில் தெரியுமா??set-made-for-yasoda-movie-shooting-in-3crores-expensive

தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. அவர் தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஹரி - ஹரிஷ் இயக்கி  வருகின்றனர்.

மேலும் பிரம்மாண்டமாக உருவாகும் யசோதா திரைப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.

samantha

இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நட்சத்திர ஹோட்டலில்தான் நடைபெற்றுள்ளதாம். இந்த நிலையில் இரண்டு மாடி கொண்ட பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி செட் போடப்பட்டுள்ளது. அதில் 7 நட்சத்திர விடுதியில் உள்ள அனைத்து அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கோடி செலவில் இந்த செட் போடப்பட்டுள்ளது.