சினிமா

அடேங்கப்பா.. பிக்பாஸ் ஷிவானிக்கு அடுத்து அடுத்து அடிக்கும் பெரும் ஜாக்பாட்! எந்த ஹீரோவுடன் நடிக்கவுள்ளார் தெரியுமா?

Summary:

அடேங்கப்பா.. பிக்பாஸ் ஷிவானிக்கு அடுத்து அடுத்து அடிக்கும் பெரும் ஜாக்பாட்! எந்த ஹீரோவுடன் நடிக்கவுள்ளார் தெரியுமா?

விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில்  ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் முதலில் அழகு பொம்மையாகவே வலம் வந்து பின்னர் பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

 

இந்நிலையில் ஷிவானி  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

 


Advertisement