"தனது கனவு இல்லப் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள சரண்யா!"

"தனது கனவு இல்லப் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள சரண்யா!"


Serial actress own house photos

சின்னத்திரையில் பிரபலமானவர் சரண்யா. இவர் நியூஸ் 18 சேனலில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர். சில நேரங்களில் நிருபராகவும் நேரடியாக களத்தில் இறங்கி செய்திகளைத் தருவார். அதே போல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் களத்தில் நின்று நேரடி செய்தியை வழங்கினார்.

Saranya

இதையடுத்து இவருக்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. நெஞ்சம் மறப்பதில்லை, ரன் மற்றும் ஆயுத எழுத்து, ரோஜா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் சரண்யா. 

இதையடுத்து வெள்ளித்திரையில் காலடி வைத்த சரண்யா, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு அவ்வளவாக பெயர் கிடைக்கவில்லை. 

Saranya

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய வீட்டின் புகைப்படங்களை பதிவிட்டு "எனது கனவு இல்லா முதல் கார்த்திகை தீபம்" என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.