13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அடேங்கப்பா.. தீபா அக்காவா இது! சின்ன வயசுல அடையாளமே தெரியாம எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கோமாளியை போல அனைவரையும் சிரிக்க வைத்து பெருமளவில் பிரபலமானவர் தீபா. இவர் தமிழில் வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசர வைத்துள்ளார்.
மேலும் எப்பொழுதும் வெள்ளந்தியாக இருக்கும் அவர் தனது வெளிப்படையான பேச்சாலும், சிரிப்பாலும் கலகலப்பாக இருப்பார். நடிகை தீபா சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது கணவர் சங்கர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தீபா மற்றும் சங்கர் இருவரும் தற்போது விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தீபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தீபா அக்காவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.