சன் டிவி சாக்லேட் ஹீரோவிற்கு கல்யாணம் முடிஞ்சாச்சு! பொண்ணு யார்னு பார்த்தீர்களா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

சன் டிவி சாக்லேட் ஹீரோவிற்கு கல்யாணம் முடிஞ்சாச்சு! பொண்ணு யார்னு பார்த்தீர்களா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!


serial-actor-ragul-got-marriage

சன் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நந்தினி தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பெருமளவில் பிரபலமானவர் ராகுல் ரவி. யங்காக, க்யூட்டாக இருக்கும் இவருக்கென ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகினர். 

அதனை தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரிலும், தற்போது  ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே தொடரில் யுவா என்ற கதாபாத்திரத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் ராகுல் மலையாளத்தில் Dolls என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர்  Adukkalayil Paniyund என்ற மலையாள படத்திலும் Chethilo Cheyyesi Cheppu Bava என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராகுல் சமீபத்தில் மாடலிங் துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி நாயர் என்பவரை  விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.