மாடர்ன் உடையில் தமன்னாவையே மிஞ்சிய சுந்தரி சீரியல் நாயகி.. மாஸ் காட்டிய வைரல் புகைப்படம்!

மாடர்ன் உடையில் தமன்னாவையே மிஞ்சிய சுந்தரி சீரியல் நாயகி.. மாஸ் காட்டிய வைரல் புகைப்படம்!



serial-actor-gabrellasellus-photo

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவின் மாடர்ன் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகும் தொடர்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் அளவிற்கு எல்லா தொடர்களும் உள்ளது. அந்தவகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் கிராமத்து மக்களை கவரும் வகையில் "சுந்தரி" என்ற புதியதொடர் ஒளிபரபாகி வருகிறது.

கிராமத்தை சேர்ந்த சாதாரண பெண் ஒருவரின் வாழ்க்கை, அவரது போராட்டங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில், தொடரின் நாயகியாக நடிப்பவரின் பெயர் கேப்ரில்லா செல்லுஸ். திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், பல்வேறு விதவிதமான டிக் டாக் வீடியோக்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர்.

மேலும் சுந்தரி தொடரில் கிராமத்துபெண் தோற்றத்தில் நடிக்கும் இவரின், மாடர்ன் உடையில் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் இந்த பொண்ணா அந்த பொண்ணு என அவர்களுக்குள்ளே கேள்வி எலுப்புகின்றனர். இதோ அந்த புகைப்படம்...எனவும், மாடர்ன் உடையில் நீங்க தமன்னாவையே மிஞ்சிடீங்க எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.