சினிமா

செந்தில் கணேஷ், ராஜலஷ்மிக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Summary:

Senthil ganesh and rajalakshmi singing song in suryas movie

விஜய் தொலைக்காட்சி எத்தனையோ திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பிரபலமாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்களே. அந்த வகையில் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளனர் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

https://cdn.tamilspark.com/media/174212rb-Rajalakshmi-Senthil-4.jpg

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர்கள் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டனர். தற்போது பலவேறு படங்களில் பாடல்களையும் பாடி வருகின்றனர். அந்த வகையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் இணைந்து பாடிய என்ன மச்சான் பாடல் பயங்கர ஹிட் ஆனது.

தற்போது இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து ஒரு பாடல் பாட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசை அமைக்கவுள்ளாராம்.


Advertisement