சினிமா

எப்படிவந்த செந்தில் கணேஷ் ஜோடி எப்படி ஆகிட்டாங்க பாருங்க!! அது தான் விஜய் டிவியின் ரகசியம்!!

Summary:

senthil ganesh and rajalakshmi


பிரபல டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட போட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றியாளராக செந்தில் கணேஷ் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் ஆவார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மனதில் இடம்பிடித்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த நிலையில்  தற்போது ‘கறிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  

senthil ganesh modern photo க்கான பட முடிவு

மேலும், செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர் ஆவர்.

விஜய் டிவி மூலம் உச்சத்திற்கு சென்றவர்கள் பலர் உள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போலவே செந்தில் கணேஷும் உயர்ந்து வருகிறார். இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விஜய் டிவியில் வரும் பிரபலங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வது ரகசியமாகவே உள்ளது.
 


Advertisement