சினிமா

பிரபல ஹீரோக்கள் போலவே களமிறங்குகிறார் நாட்டுபுறநாயகன்!. அவருடன் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.

Summary:

பிரபல ஹீரோக்கள் போலவே களமிறங்குகிறார் நாட்டுபுறநாயகன்!. அவருடன் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.


புதுக்கோட்டை மாவட்டம் களபம் கிராமத்தை சேர்ந்த செந்தில் கணேஷ் என்ற இளைஞர் அவரது பள்ளி பருவத்திலேயே நாட்டுப்புற பாடலில் ஆர்வம் கொண்டவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் படித்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கிராமங்களில் நடக்கும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடிவந்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கு இவருக்கும் இவரது மனைவி ராஜலக்ஸ்மிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது நாட்டுப்புற பாடலால் ரசிகர்களை கவர்ந்தவர் செந்தில் கணேஷ். மேலும் தனது திறமைக்கு பரிசாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் அவரே வெற்றி பெற்றார். 

 அதன் பின்  நாட்டுப்புற பாடல் புகழ் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு புகழின் உச்சிக்கே சென்ற சூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

அவர் தற்போது "கரிமுகன்" என்ற படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தில் நடிகை காயத்திரி ஐயர் செந்தில் கணேஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு அழகான நாட்டுப்புற பாடலையும் பாடியிருக்கிறார்.

 இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை செந்தில் கணேஷ் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 


Advertisement