செம மாஸ்தானோ.. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இப்படிப்பட்ட ரோலில் நடிக்கிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

செம மாஸ்தானோ.. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இப்படிப்பட்ட ரோலில் நடிக்கிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!


Selvaragavan role in thalapathi beast movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். 

மேலும் விஜய்யின் 65வது படமான இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் எதிர்பார்ப்பையும் கிளப்பியது.

Selvaragavan

பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செல்வராகவன் பீஸ்ட் படத்தில் முக்கிய வில்லனாக, ஹைடெக் கம்ப்யூட்டர் ஹேக்கராக ஹீரோவிற்கு கடும் சவால்களை கொடுக்கும் ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.