சினிமா

கீர்த்தி சுரேஷ் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கும் பிரபல இயக்குனர்! யார்னு பார்த்தீர்களா!

Summary:

Selvaragavan act in keerthi suresh movie

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என்.ஜி.கே படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், உருவாகவுள்ள திரைப்படம் சாணிக் காயிதம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திரைப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.

மேலும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது  செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 


Advertisement