விரைவில் திரைக்கு வருகிறது செக்க சிவந்த வானம்! அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு!

விரைவில் திரைக்கு வருகிறது செக்க சிவந்த வானம்! அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு!



Sekka sivantha vaanam release date announced

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இசைப்புயல் AR ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் கடந்த 5-ம் தேதி இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

மேலும் இத்திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

sekka sevantha vaanam audio launch

இந்நிலையில், வருகிற 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 27-ம் தேதியே ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீஸாகிறது.

செப்டம்பர் 27-ம் தேதி ‘செக்கச்சிவந்த வானம்’ படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.