சினிமா

தெறிக்கவிடப்போகும் இசைப்புயலின் இசைமழை செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்கள் வெளியீடு தேதி அறிவிப்பு

Summary:

பல நட்சத்திரங்களை கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக போகும் திரைப்படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.  

ar rahman க்கான பட முடிவு
 
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வழக்கம்போல இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகிய ஒரே நாளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வருகிற 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 


Advertisement