நடிகர் விக்ரமா இது? வித்தியாசமான லுக்கில் கெத்து காட்டும் சீயான்! பலரும் கண்டிராத அரிய புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பார்ப்பவர் சீயான் விக்ரம். தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தனது தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே. சேது, தெய்வ திருமகள் சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.
இந்நிலையில் இறுதியாக விக்ரம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் தற்போது டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாபெரும் பட்சத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.
இந்நிலையில் பல வித்தியாசமான தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ள விக்ரம் ஆரம்ப காலத்தில் டீ தூள் விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த லுக் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
