சினிமா

நடிகை பரவை முனியம்மா உயிரிழந்துவிட்டாரா? பரபரப்புக்கிடையே பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!!

Summary:

sbisaravanan post video about abisaravanan

தமிழ் சினிமாவில் தூள் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா.  இவர் மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். பரவை முனியம்மா  காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன், ஜெய்சூர்யா, ராஜாதி ராஜா, வீரம், மான் கராத்தே என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல்  என்ற நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமின்றி பரவை முனியம்மா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மா உடல்நிலை மிக மோசமாகி மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் சில நடிகர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பரவை முனியம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த செய்தி பொய் எனவும் பரவை முனியம்மா அவர்கள் நன்றாக  உடல்நலத்துடன் உள்ளார் எனவும் நடிகர் அபிசரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement